1.3.12

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல ! இளிச்சவாயர் கூட்டமும் அல்ல ! சீறிப் பாயும் புலிகள்.......

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் (7-7-2012)

செங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் காலை திறப்பு மணி அடிக்கும் வரை மறைவான இடத்தில் தங்கிப் படித்து மணி அடித்ததும் நேராக வகுப்பு சென்று அமர்ந்து கொள்வான்.

படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன் என்றார்.

1884 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்சினைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

1886 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. முதல் மாநாட்டின் சாதித்த சாதனைகளையும், திட்டத்தை பற்றி தாதாபாய் நௌரோஜி ‘We are met together as a political body to represent to our rulers our political aspirations but not to discuss social reforms’ என்று பேசினார்.

சீனிவாசன் 1980 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப்பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப் “பறையன்” என்று பெயர் வைத்தார்.

நான்! நான்! என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகலமும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல் நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமும் இல்லாமல் உண்மை பேசித் தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் இன்பமுள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் ‘பறையர்’ இனத்தாருக்கு ‘பறையன்’ என்பவன் ‘நான் தான்’ என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான். எனவேதான் நான் ‘பறையன்’ எனும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தேன் என்று எழுதினார். (- ஜீவிய சரித்திரச் சுருக்கம் - பக். 8).
“பறையன்”, 15 ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல் “பறையர் மகாஜன சபை”யைத் இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1893 நவம்பர் 7ம் நாளிட்ட பறையன் இதழில் பறையன் முகவரியிட்டு வரும் கடிதங்களை முகவரியாளர்களைத் நேரில் தேட முடியாது என அஞ்சல் ஊழியர்கள் சேரிக்குள் நுழைவதில்லை என்றும் கூறினார். 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.


1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

“இந்துக்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள், பறையர், பஞ்சமர், தாழ்த்தப்பட்டோர் என்னும் பல பேரால் அழைக்கப்பட்டு வந்து இப்போது ஆதி திராவிடர்கள் என வழங்கும் சமூகத்தவர்களும் இதர சமூகத்தவர்கள் போல் அரசாங்கத்தில் அலுவல்களிலும், ஆட்சி முறைகளிலும், மாநில மந்திரி பதவியிலும் பங்கு பெற உரிமை உண்டாகி இருக்கிறது.